அமெரிக்கா செல்லும் இந்திய நிறுவனங்களின் முதலீடு 20.5 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம்!

2 Min Read

புதுடில்லி, மே 7 அமெரிக்காவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் ‘செலக்ட் யுஎஸ்ஏ’ (Select USA) மாநாட்டில், இந்திய நிறுவனங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளன.
இதில் குறிப்பாக மருந்துத் துறை நிறு வனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
அதாவது மொத்த முதலீட்டில் சுமார் 19.1 பில்லியன் டாலர்கள் மருந்துத் துறையில் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் மிக முக்கியமாக, சன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனம் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ‘ஆர்கனான் & கோ’ நிறுவனத்தை 11.75 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. அரவிந்தோ பார்மா, பயோகான், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரிஸ், லூபின், ஜைடஸ் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த முதலீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளன.
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel) நிறுவனம் ஓஹியோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் உள்ள தனது ஆலைகளை நவீனப்படுத்த 225 மில்லியன் டாலர் முத லீடு செய்யவுள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த அபித்யாய் குழுமம் அய்ந்து அமெரிக்க நகரங்களில் 900 மில்லியன் டாலர் முதலீடு செய்து, 1,500 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அய்அய்டி மெட்ராஸ் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை, கலிபோர்னி யாவில் ஆராய்ச்சி மய்யம் அமைக்க 4.5 மில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் இரு நாடு களுக்கும் இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக அதிகரிக்க இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டதன் பின்னணியில் இந்த முத லீடுகள் நடத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி (Trade Surplus) சுமார் 41 பில்லியன் டாலராக உள்ளது.
இதைச் சமன் செய்ய இந்திய நிறு வனங்கள் அமெரிக்கா விலிருந்து அதிக இறக்குமதி செய்ய வேண்டும் என்றும், அங்கு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்ப்பின் சில வரி விதிப்பு அதிகாரங்களை ரத்து செய்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடை யிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தற்போது இழுபறியில் உள்ளது.
2026 ஜூலை மாதத்திற்குள் அமெரிக்கா தனது புதிய வரி விதிப்பு முறையை அறி விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னரே இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *