தமிழ்நாட்டில் 12ஆம் தேதி வரை மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 7- மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று (6.5.2026) 11 மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ள நிலையில், இந்த மழைப்பொழிவு வரும் மே 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தற்போது இரண்டு முக்கிய வானிலை மாற்றங்கள் நிலவுகின்றன:

மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 1.5 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட உள் கருநாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழ்நாடு வழியாக 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலைகொண்டுள்ளது.

மே 11 வரை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும்.

மே 12 அன்று: தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக கரூர், ஈரோடு, வேலூர் மற்றும் மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.

மழை காரணமாக வரும் 10ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னையில் இன்று (7.5.2026) வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *