சித்தூர், ஏப். 29- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியில், பிரபல தெலுங்கு நாளிதழ் செய்தியாளர் அடையாளம் தெரியாத நபர்களால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
வி.கோட்டாவைச் சேர்ந் தவர் ஜெகன்மோகன், தெலுங்கு நாளிதழ் பத்திரி கையில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று (28.4.2026) காலை அவர் தனது நண்பரும் சக செய்தியாளருமான சுப்ரமணியத்துடன் வழக்கம் போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஜெகன்மோகனை வழி மறித்து ஆயுதங்களால் தாக் கத் தொடங்கியது.
அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் ஓடியும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல், நடுரோட்டில் வைத்து அவரை கண்மூடித் தனமாக வெட்டிக் கொலை செய்தது. இதனைத் தடுக்க முயன்ற சுப்ரமணியத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு செம்மரக் கடத்தலில் தொடர்பு இருப்பதாக ஜெகன்மோகன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த விவகாரமே கொலைக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தப்பியோடிய கொலை யாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பி யுள்ளதுபத்திரிகையாளர் சங்கங்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் இச்சம்பவத்தை முன்னி றுத்தி விமர்சித்து வரு கின்றன. காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
