பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு சிங்கப் பெண் விருது!

1 Min Read

திருச்சி, ஏப்.28-கல்வித் துறையில் சிறப்பாக செயலாற்றும் கல்வியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் அருந்தமிழ்ச் சங்கம் என்ற அரசு பதிவு பெற்ற அமைப்பு திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களுக்கு மருந்தியல் துறையில் கடந்த 37 ஆண்டு சிறப்பான கல்விச் சேவையினை பாராட்டி  சிங்கப் பெண் விருதினை 26.04.2026 அன்று அரக்கோணத்தில் நடைபெற்ற மகளிர்  நாள் விழாவில் வழங்கி சிறப்பித் துள்ளது.

இந்நிகழ்வில் பெங்களூரு உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் சியாமளா சந்தீப் மற்றும் அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்
ச.கவு.கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் புரவலர்கள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள், மருத்துவர்கள், வழக் குரைஞர்கள் மற்றும் அருந்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் பாப்ஜி சந்தர், நெறியாளர் கேத்ரின் இமாகுலேட் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *