சென்னை, ஏப். 24– இந்தியாவின் முன் னணி உயர்கல்வி நிறுவனங் களான அய்அய்டி (IIT) மற்றும் அய்அய்எஸ்சி (IISc) ஆகியவற்றில் இள நிலைப் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced 2026) நுழை வுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (24.4.2026) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட் வான்ஸ்டு என இரண்டு கட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு 2026-ஆம் ஆண்டிற் கான முதன்மைத் தேர் வுகள் (JEE Main) ஏற்கனவே ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. தற் போது, முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான அடுத்தகட்டமான ‘பிரதானத் தேர்வு’ (Advanced) குறித்த அறிவிப்பு கள் வெளியாகியுள்ளன:
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2, 2026.
தேர்வு நடைபெறும் நாள்: மே 17, 2026.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாண வர்கள் https://jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடத்தும் நிறுவனம்: இந்த ஆண்டு இத்தேர்வினை அய்அய்டி ரூர்க்கி (IIT Roorkee) நடத்துகிறது.
மே 17ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வு, தலா மூன்று மணி நேரம் கொண்ட தாள்-1 மற்றும் தாள்-2 என இரண்டு கட்டங்களாக (காலை மற்றும் மதியம்) நடைபெறும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த மே 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
குறிப்பு: ஜேஇஇ மெயின் தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களுக்குள் வந்த மாணவர்கள் மட்டுமே இந்த அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

