மலேசியா முதுபெரும் பெரியார் தொண்டர் கெ. வாசு அவர்களின் இரங்கல் கூட்டம்

1 Min Read

மலேசியா, ஏப். 28– மலேசியா தாப்பா நகரில் அண்மையில் காலமான முதுபெரும் பெரியார் தொண்டர் கெ. வாசு அவர்களின் இரங்கல் கூட்டம் 25.4.32026இல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மற்றும் பேரா மாநிலத்தைச் சார்ந்த பெரியார் தொண்டர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். தா.சி, முனியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பெரியார் பாசறையின் தலைவர் மு.மணிமாறன் முன்னிலை வகித்தார்.

தோழர்கள் மா.இலட்சுமணன், விந்தை குமரன், முனைவர் மு கோவிந்தசாமி, பன்னீர்செல்வம், அறிவின் மற்றும் பல பெரியார் சிந்தனையாளர்கள் உறவினர்கள் நினைவில் வாழும் வாசு அவர்களைப் பற்றி அவரின் 50 ஆண்டுகால திராவிட இயக்க பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அவர் விட்டுச் சென்ற பெரியார் பாசறை யின் பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்திட வேண்டும் என்று செயற்குழுவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *