தஞ்சாவூர், ஏப். 28- தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில் பாரதி தாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. பேராசிரியர் குட்டிமணி வரவேற்றார். குந்தவை நர்சிங் கல்லூரியின் நிர்வாக அலுவலர் பாஸ்கர் அவர்கள் தலைமை வகித்தார்.
மன்ணை நாராயணசாமி பிசியோதெர பி கல்லூரி துணை முதல்வர் அ.சதீஷ்குமார், படிப்பக உறுப்பினர் இரா. செந்தூரப் பாண்டியன், தஞ்சை வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் நெல்லுப்பட்டு இராமலிங்கம் உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை பிரவுஷர் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். புத்தக கண்காட்சியில் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் கி.வீரமணி. முத்தமிழ் அறிஞர் கலைஞர். எழுத்தாளர்கள் இறையன்பு, வைரமுத்து, தொ.பரமசிவம், ஜெயகாந்தன். எஸ்.இராமகிருட்டிணன். சு.தமிழ் செல்வன். வேலா.இராமூர்த்தி பாலமுருகன், சுஜாதா, இலட்சுமி உள்ளிட்டோரின் படைப்புகள் தன்னம்பிக்கை, கதை, கவிதை, கலை, பண்பாடு, இயலிசை அடங்கிய தமிழ், ஆங்கில நூல்கள் 15 விழுக்காடு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

