டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஜூலை 4 முதல் இலவசப் பயிற்சி

சென்னை, ஜூலை 2- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மய்யம் திட்டமிட்டுள்ளது. திறமைமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்தரையாடல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இலவசமாக வழங்க உள்ளன. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம். எண். 6/9, அக்ரஹாரம் சந்து, அரண்மனைக்காரன் தெரு  என்ற முகவரியில் அமைந்துள்ள கல்வி மய்யத்தில் ஜூலை 4 முதல் வகுப்புகள் தொடங்குகிறது.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்புகள் நடைபெறும். தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான ஒளிப்படம் மற்றும் முகவரிக்கான ஆதார நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 97912 85693, 73387 03324, 73581 44387, 90426 92613, 63698 74318, 94446 41712 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *