‘ஆம் ஆத்மி’யின் கடிதத்திற்கு பதில் அளிக்காமல் பா.ஜ.க.விற்கு ஆதரவாகச் செயல்படும் மாநிலங்களவைத் தலைவர்

2 Min Read

புதுடில்லி, ஏப்.28 ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் மாநி லத்தின் செயல் தலைவர் (ஆம் ஆத்மி) அந்தஸ்தில் பணியாற்றியவருமான ராகவ் சதா மற்றும் அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த 24.4.2026 அன்று திடீரென பாஜகவில் இணைந்தனர். இவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக மாநிலங்களவைத் தலை வர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கக் கூட மறுத்துவிட்டார். ஆனால், 7 உறுப்பினர்கள் தாங்கள் பாஜகவின் சட்டமன்றக் குழுவில் இணைவதாக அளித்த கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வதாக மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று (27.4.2026) அறிவித்திருக்கிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இனி பாஜக வின் ஒரு பகுதியாகவே கருதப்படு வார்கள்.

விலைக்கு வாங்குவதன் மூலம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம், 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 113 நாடாளு மன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக மாறியுள்ளது. அதே போல பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலங்களவையில் பெரும் பான்மைக்கு 123 உறுப்பி னர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 13 உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர்

ஆம் ஆத்மி கண்டனம்

மாநிலங்களவைத் தலைவரின் இந்த ஒருதலைபட்சமான முடிவுக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநி லங்களவை தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,”பாஜகவுடன் இணைந்த 7 உறுப்பினர்களின் முடிவு அப்பட்ட மான கட்சித்தாவல் ஆகும்.

ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங் கப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, அந்த 7 உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவைத்தலைவரிடம் மனு அளித்துள்ளேன். ஆனால் அவைத்தலைவர் இந்த இணைப்பிற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். நான் அளித்த தகுதி நீக்க மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *