லண்டன் மாரத்தான் போட்டி: கென்ய வீரர் புதிய உலக சாதனை

லண்டன், ஏப். 27- லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே புதிய உலக சாதனை படைத் துள்ளார். பந்தய தூரத்தை அவர் 1 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்.

ஓட்டப்பந்தய விளையாட்டு உலகில் மாபெரும் போட்டியாக அறியப்படுவது மாரத்தான் ஓட்டம். அப்படிப்பட்ட பெருமையை பெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலக நாடுகளின் பல்வேறு வீரர்கள் கலந்து கொண் டனர்.

முடிவில், இந்த போட்டியில் கென்யாவின் செபஸ்டியன் சாவே போட்டி தூரத்தை (42.2 கிமீ) முதலில் கடந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகள் ஆகும். இது புதிய உலக சாதனையாகும். அதாவது மாரத்தான் உலகில் 2 மணி நேரத்திற்கும் குறைவாக எந்த ஒரு வீரரும் போட்டி தூரத்தை கடந்தது இல்லை என்ற தடையை அவர் உடைத்துள்ளார்.

இதன் மூலம் 2023இல் சிகாகோவில் கென்யாவின் மறைந்த கெல்வின் கிப்டம் படைத்திருந்த 2 மணி நேரம் 35 வினாடிகள் என்ற உலக சாதனையை அவர் முறியடித் துள்ளார். அதாவது வெறும் 65 வினாடிகள் நேரம் முன்பாக போட்டி தூரத்தை கடந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். உகாண்டாவின் யோமிப் கெஜலிச்சா 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 41 வினாடிகளில் கடந்து 2ஆவது இடத்தை பிடித்தார்.

புதிய உலக சாதனையை படைத்து இருக்கும் 29 வயதான செபஸ்டியன் சாவே நடப்பு சாம்பியன் ஆவார். தற்போது அவர் படைத்துள்ள புதிய சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த் துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சாதனை குறித்து செபஸ்டியன் சாவே பேசியதாவது; பந்தய தூரத்தில் இலக்கை அடைந்த பின்னர் நேரத்தை பார்த்த பின் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நாள் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *