அரித்துவாரில் பாழாய்ப்போகும் பாலும், நீரும்!

1 Min Read

கடந்த ஏப்ரல் முதல் வாரம் நர்மதை நதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசும்பாலை டேங்கர் லாரி மூலம் சாமியார் ஒருவர் ஊற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “யமுனைக்கு அபிஷேகம்” என்ற பெயரில் செய்யப்பட்ட இந்தச் செயல், உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது சில ஆன்மிகக் குழுக்கள் மற்றும் சாமியார்கள் நதிகளில் பாலை ஊற்றும் செயலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அரித்துவாரில், ஒரு சாமியார் தலைமையிலான குழுவினர் வாளி வாளியாகப் பாலை கங்கை நதியில் ஊற்றி அதனை காணொலி காட்சிப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர்.

பாரம்பரியம்: நதிகளுக்குப் பால் அபிஷேகம் செய்வது என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்து தர்மத்தின் ஒரு பகுதி என்றும், இது நதியன்னையை வழிபடும் ‘புனித’மான செயல் இந்த நடைமுறையை விமர்சிப்பவர்கள் இந்துக்களின் நம்பிக்கையை ஏளனம் செய்பவர்கள் என்றும், கலாச்சாரத்தைக் காக்கவே தாங்கள் இவ்வாறு செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நதிகள் ஏற்கெனவே மாசுபட்டு வரும் சூழலில், அதிகப்படியான பால் மற்றும் இதர பொருட்களை ஆற்றில் கலப்பது நீர்வாழ் உயிரினங்களுக்கும், நீரின் தூய்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியாதா? என்ற கேள்வியையும் சூழலியல் ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.   இந்த விவகாரம் தற்போது ஆன்மீக நம்பிக்கையா அல்லது வளங்களை வீணடிக்கும் செயலா என்ற பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *