
சென்னை, ஏப்.23 மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (23.4.2026) காலை 8 மணியளவில் சென்னை அடையாறில் வாக்களித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
1957 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இன்றுவரை வாக்களித்துக் கொண்டு வருகின்ற ஒருவன், இன்று (23.4.2026) நடைபெறும் 17 ஆவது தேர்த லிலும் வாக்க ளிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி!
தேர்தல் என்பது ஜனநாய கத்தின் ஒரு கூறுதான், மிக முக்கியமான ஒரு சூழ்நிலைக்குரியது.
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது! அந்த வீச்சின் காரணமாக, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமையும்.
‘தங்கு சட்டமன்றம் தான்!
சிலர் சொல்வதுபோல, ‘தொங்கு சட்டமன்றம் வராது’, ‘தங்கு சட்டமன்றம் தான் வரும்.’
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

