மருந்தியல் மாணவர்களின் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வில் (GPAT 2026) பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

1 Min Read

திருச்சி, ஏப். 19- இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு பயிலும் மருந்தியல் மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான GPAT 2026 நுழைவுத் தேர்வில் திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் 16 பேர் பங்கேற்றதில் எம். ரிஷோர், எஸ். சிறீமதி பிரியா, உஅ. கவியாழினி, பி.அய்ஸ்வர்யா மற்றும் ஆர். சிவ சங்கரி என மொத்தம் 5 பேர் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளனர்.

மாணவர்களின் இத்தகைய வெற்றிக்கு அவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் கலைஞர் கருணாநிதி நூல கத்தினை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியமையே காரணமாக அமைந்தது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி யின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *