கட்னி (மத்திய பிரதேசம்), ஏப்.13 பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் “டபுள் என்ஜின்” அரசு நடைபெற்று வரும் சூழலில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பீகாரில் இருந்து மகாராட்டிராவிற்கு கடத்தி வரப்பட்ட 163 சிறுவர்கள் மத்திய பிரதேசத்தில் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் உடனடியாக கட்னி மற்றும் ஜபல்பூரில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் மீது ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலவீனமாக இருப்பதே இத்தகைய தொடர் கடத்தல் சம்பவங்களுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

