அ.தி.ம.மு. கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு!

1 Min Read

சென்னை, ஏப்.4- சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (3.4.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2019 முதல் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஸநாதன, மதவாத சங்பரிவார் கூட்டத்தை அரசியலில் கால் பதிக்க விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரித்து வந்தது.
நாங்கள் தி.மு.க.விடம் தேர்தலில் போட்டியிட மூன்று தொகுதிகள் கேட்டிருந்தோம், அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. டில்லி அணியை எதிர்ப்பதற்காக தமிழ்நாடு அணியில் இணைந்து இருக்கிறோம். என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் தி.மு.க.வுக்கு எங்களின் ஆதரவு. அதேபோல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், தற்குறி தவெகவிற்கு எங்களது ஆதரவு இல்லை. திமுக கூட்டணி கட்சிகளுக்கும் திமுகவினருக்கும் நாங்கள் முழு ஆதரவை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *