கோட்டையைத் தக்கவைக்கத் தயார்! சேப்பாக்கத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்

1 Min Read

சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் களம் கண்டு அமோக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.  வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார். கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதலமைச்சராக முதல் தேர்தல்: விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து, பின்னர் துணை முதலமைச்சராக உயர்ந்த பிறகு அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், இத்தொகுதி தற்போது தமிழ்நாட்டில் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் அன்போடும், ஆதரவோடும் மீண்டும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல், இனி வரும் காலங்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடுவேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *