திராவிட மாடல் அரசில் கல்வி வளர்ச்சி சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஏப். 4- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த கல்வியாண்டில் மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு அமைப்புகள் மூலம் புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி கோரி சென்னை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகவும், 2026 – 27ஆம் ஆண்டு முதல் புதிய கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல கல்வி அறக்கட்டளைகள், புதிய கல்லூரிகளைத் திறக்க விண்ணப்பித் திருப்பதாகவும், ராயப்பேட்டை, ஆலந்தூர், வியாசார்பாடி, வேதாச்சலம் நகர், மண்ணிவாக்கம், மதுராந்தகம், பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, ஏற்கனவே, பொறியியல் கல்லூரிகளை நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைகள், தற்போது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளின் மீது மாணவர்கள் கவனம் திரும்புவதால், புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி களைத் திறக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

புதிய கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டதும், பல்கலைக்கழகம் தரப்பில் அனுமதி வழங்கப்படும். முதலாம் ஆண்டில் குறைந்தது 5 பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரி கள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *