தோகா, மார்ச் 22- மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கத்தாரில் உள்ள முக்கிய எரிவாயு உற்பத்தி மய்யங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் உலகளாவிய எரிவாயு விநியோகச் சங்கிலியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எரிவாயு ஆலை மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக் காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வித மாக ஈரான் வளைகுடா நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மய்யங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி எரிவாயு ஏற்று மதி நிறுவனமான ‘கத்தார் எனர்ஜி’ மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அந்நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதலின் விளைவாக, கத்தாரின் மொத்த ஏற்றுமதி திறன் 17 சதவீதம் வரை சரி வடைந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 1.28 கோடி டன் வரை எரிவாயு உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் சீரடைய குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.
கத்தாருடன் நீண்ட கால எரிவாயு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கு கத்தார் எனர்ஜி நிறுவனம் அவசர கால அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட முழு அள விலான எரிவாயுவை தற்போது வழங்க இயலாது என்றும், தற்போதுள்ள சூழலில் சாத்தியமான அளவே ஏற்றுமதி செய் யப்படும்” என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
கத்தாரின் இந்த அறிவிப்பால் இந்தியா உள்ளிட்ட நேரடி ஒப்பந்தம் வைத்துள்ள நாடுகள் உடனடியாகப் பாதிப்புக்குள்ளாகும். ஆசிய மற்றும் அய்ரோப் பிய சந்தைகளில் எரி வாயு தட்டுப்பாடு ஏற் படுவதுடன், அதன் விலையும் கணிசமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் கத்தாரின் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கம், ஏற்கனவே நிலவி வரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
