பெய்ஜிங், ஆக. 6- இந்தியாவில் அண்மையில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களை, பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என்று சீன விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.
இந்தியக் கல்வி முறையின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதையே இந்தப் போராட்டங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடியின் பொருளா தாரக் கொள்கைகள் இந்தியாவின் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டதாக ஃபுடான் பல்கலைக்கழக அறிஞர் ஒருவர் வாதிட்டார்.
சீனாவின் சமூக வலைதளமான வெய்போ பயனர்களும், இந்தப் போராட்டங்கள் இந்தியா வின் கல்வி முறை மற்றும் நிர் வாகத்தின் பலவீனங்களை வெளிப் படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிராகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், காக்ரோச் ஜனதா கட்சியின் தலைமையில் இளைஞர்கள் ஜூன் 20 முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இது தவிர, நாட்டின் பல இடங்களிலும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ஜூலை 25ஆம் தேதி பதவியை விட்டு விலகிய பிறகு சி.ஜே.பி (காக்ரோச் ஜனதா கட்சி) போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் அண்மையில் நாடு தழுவிய அளவில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு, இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறித்த பரவலான கவலைகளே காரணம் என்று சீன விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
