குழாய்வழி இயற்கை எரிவாயு உள்ள வீடுகளுக்கு எல்பிஜி எரிவாயு உருளை விநியோகிக்கத் தடை! புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஒன்றிய அரசு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 16- வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு இருந்தால், வீட்டு உபயோக எல்பிஜி எரிவாயு உருளை இணைப்பை வைத்திருக்க முடியாது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு விதித்ததுள்ளது.

குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள வீடுகளுக்கு எல்பிஜி இணைப்புகளை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் நிகழும் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பி.என்.ஜி.எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்பைக் கொண்ட வீடுகளுக்கு வீட்டு எல்பிஜி விநியோகம் மற்றும் மறு நிரப்பலை தடைசெய்யும் வகையில், ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே பிஎன்ஜி இணைப்புகளைக் கொண்ட வீடுகளுக்கு அரசு எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி இணைப்புகள் மற்றும் ரீஃபில் செய்வதையும் தடைசெய்வதாக பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய எல்பிஜி நுகர்வோரான இந்தியா, அதன் தேவைகளில் சுமார் 90 சதவீதத்திற்கு இறக்குமதியை நம்பியுள்ளது.

நாட்டில் ஏற்கனவே 1 கோடியே 50 லட்சம் பேரின் வீட்டில் பிஎன்ஜி இணைப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த இணைப்பு உள்ள பகுதியில் 60 லட்சம் வீடுகள் பிஎன்ஜி இணைப்புக்கு மாறுமாறு பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *