பக்தி வேடத்தில் பகல் கொள்ளை! உரிமம் இல்லாத நிறுவனத்தில் இருந்து 8 ஆண்டுகளாக எரிவாயு உருளை வாங்கிய திருப்பதி நிர்வாகம் சோதனையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சோதனையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் வர்த்தக எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் பயன்படுத்தி எரிவாயு உருளைகள் பதுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருப்பதி அடுத்த திருச்சானூர் – எம்.ஆர்.பல்லி சாலையில் உள்ள ஒரு கிடங்கில் (குடோனில்) சிவில் சப்ளை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகளைக் கண்டதும் அந்த கிடங்கின் உரிமையாளர் பிரம்மா ரெட்டி தப்பியோடினார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில்: 585 வர்த்தக சிலிண்டர்கள் 80 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், அந்த கிடங்குக்கான ‘பாரத் காஸ்’ உரிமம் கடந்த 2019-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது. இருப்பினும், கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித சட்டபூர்வ உரிமமும் இன்றி, ‘கோ காஸ்’ (Go Gas) என்ற பெயரில் விதிகளுக்குப் புறம்பாக திருமலைக்கு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பிரம்மா, திருப்பதி சட்டமன்ற உறுப்பினரின் வலதுகை போன்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகார பலத்தைப் பயன்படுத்தி, கடந்த பல ஆண்டுகளாக முறையான உரிமம் இன்றி திருப்பதி நிர்வாகத்திற்கு எரிவாயு உருளை சப்ளை செய்யப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாமான்ய மக்கள் எரிவாயு உருளைகளைப் பதுக்கினால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், திருப்பதி போன்ற புனிதமான இடத்தில், பக்தி வேடத்தில் பகல் கொள்ளை அடிக்கும் கும்பல் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *