திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
இன்று (14.3.2026) காலை திருக்குவளைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: திருக்குவளைக்கு நீங்கள் வந்ததன் நோக்கம்?
தமிழர் தலைவர்: திராவிடர் கழக வரலாற்றில், திருக்குவளை ரங்கநாதன் அவர்களை எப்போதுமே மறக்க முடியாத அளவிற்கு உள்ள அந்த ஒப்பற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கும், அந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லவும் இங்கே வந்திருக்கின்றோம்.
செய்தியாளர்: தேர்தல் நெருங்கவிருக்கிறது – எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி எப்படி இருக்கும்?
தமிழர் தலைவர்: துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன், அதேபோல, எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாக அமையும்!
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
