இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு ‘ஜனசக்தி’ சிறப்பு மலர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, மலர் தயாரிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.எம்.மூர்த்தி, மூத்த தொழிற்சங்கத் தலைவர் இரா.குசேலர், மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் தோழர்கள் உள்ளனர் (சென்னை, 11.3.2026).
