‘நவோதயா’ பள்ளிகளை அனுமதிக்க முடியாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 12 இரு மொழி கொள்கைக்கு எதிராக இருப்பதால், ஜவஹர் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ மாநில அரசுக்கு உத்தரவிட கோரிய மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகி யோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்:

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை உள்ளடக்கிய மும்மொழி கொள்கை யால் வரையறுக்கப்பட்டு உள்ளது. இது, தமிழ்நாட்டில் கடைப்பிடிக் கப்படும் இரு மொழி கொள்கைக்கு எதிரானது என்பதால், அந்த பள்ளிகளை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 38 உறைவிட வசதியுடன் அரசின் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதன் மூலம், அனைத்து நிலையில் உள்ள மக்களும் எளிதாக அணுகும் வகையில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி பள்ளிகளில் பயின்ற, 1,340 மாணவர்கள், 2024-2025 கல்வி ஆண்டில் மட்டும், அகில இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல மாணவர்கள் முழுமையாக அரசின், ‘ஸ்காலர்ஷிப்’ பெற்று பன்னாட்டு அளவில் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இது தமிழ்நாட்டின் மேம்படுத்தப்பட்ட கல்வியின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது.

கூடுதலாக கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, ஒன்றிய அரசு தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதை செய்யாமல் கூடுதலாக கல்வி நிறுவனங்களை திறப்பது, நிதி சிக்கலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *