வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லை வழியாக வெளியேற ஈரான் அரசு அனுமதி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தெஹ்ரான், மார்ச் 3– ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரான் கல்வி நிலையங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் தங்கள் பருவ இறுதித் தேர்வுகளை பின்னர் எழுதவும், முனைவர் பட்ட ஆய்வறிக்கையை பின்னர் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள், அதற்கான தேதிகள் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஈரான் வான்வெளி பன்னாட்டு விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து கேட்டுக்கொண்டது. எனினும் வான்வெளி மூடப்பட்டது உள்ளிட்ட பிற சவால்கள் வெளியேறும் முயற்சியை சிக்கலாக்கியுள்ளன. டெஹ்ரான், உர்மியா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பெறுவதில் சிரமம் எற்பட்டுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *