‘‘தந்தை பெரியார் படத்தை மட்டுமல்ல, கட்சியையே அடகு வைத்துவிட்டார்கள்” மதுரையில் படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் கனிமொழி எம்.பி. காட்டம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.1  மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மேடை நுழைவாயிலில் இருந்து தந்தை பெரியாரின் படம் அகற்றப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப் பினருமான கனிமொழி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனிமொழி, அ.தி.மு.க.வின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக விமர் சித்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

“அ.தி.மு.க. இன்று ஒரு சுதந் திரமான கட்சியாக இயங்கவில்லை’’ என்று குறிப்பிட்ட கனிமொழி, “அ.தி.மு.க. இன்று அடகு வைக்கப் பட்ட நிலையில் உள்ளது. எனவே, முதலாளி (பா.ஜ.க.) எதைச் சொல்கிறாரோ, அதைத் தொழி லாளி (அ.தி.மு.க.) செய்கிறார். தந்தை பெரியார் படத்தை மட்டுமல்ல, அண்ணா மற்றும் ஜெய லலிதாவின் படங்களையே அகற்றச் சொன்னாலும் அவர்கள் தயங்காமல் செய்வார்கள்,” என்று சாடினார்.

பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இடமில்லை

பெரியாரின் கொள்கைகள் பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஒத்து வராது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்:”அவர்கள் இருக்கும் இடத்தில் பெரியார் இருக்க மாட்டார், இருக்க வேண்டிய அவசியமும் இல்லை’’ பெரியாரைப் புரிந்து கொள் ளாதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமும் இல்லை, வேலையும் இல்லை. “பெரியாரை மறுப்பவர்கள் தமிழ் மக்களால் நிச்சயமாக மறுக்கப் படுவார்கள்.”

பெண்களின் முன்னேற்றமும் திராவிட மாடலும்

தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரியாரே அடிப்படைக் காரணம் என்று குறிப் பிட்ட அவர், “இன்று தமிழ்நாட்டில் 42 சதவீத பெண்கள் உழைக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்றால், அதற்குப் பெரியார் போட்ட விதைதான் காரணம். அந்த வழியில் வந்த அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர்,” என்று பெருமிதத் துடன் தெரிவித்தார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *