பிஜேபி ஆட்சியின் மதவெறி! “இஸ்லாமியருக்கு இடம் தர மறுப்பு, தாழ்த்தப்பட்டோர் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு” உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத், பிப்.27 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலை யளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். அய்தராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த 21.2.2026 அன்று நடை பெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இடம் தர மறுப்பு

அப்போது, அவர் பேசியதாவது: “பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை விளக்க உங்களுடன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

என் மகளின் தோழி ஒருவர், முனைவர் பட்டம் பயிலும் அந்த மாணவி தெற்கு டில்லியில் தங்குமிடம் தேடிச் சென்றபோது, அவரது குடும்பப் பெயரைக் கேட்ட விடுதி உரிமையாளர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் இடம் தர மறுத்துவிட்டார். இதே போல் ஒடிசாவில் தாழ்த்தப் பட்ட பெண் சமைத்த மதிய உணவை, ஜாதி பாகுபாடு காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மறைந்து கிடக்கும் பெரிய அவலங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

2009-ஆம் ஆண்டு டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ‘நாஸ் அறக்கட்டளை’ (Naz Foundation) வழக்கை கவனித்தால், தன்பாலின ஈர்ப்பு குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்த அந்தத் தீர்ப்பு, பெரும்பான்மை மக்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதை விட, அரசியலமைப்புச் சட்டம் எதைச் சரி என்று சொல்கிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. ஒரு செயலைப் பொதுமக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக, சட்டப்பிரிவு 21-இன் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசு பறிக்க முடியாது.

அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது ஜனநாயக நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதையும், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. நிர்வாக அதிகாரம் மற்றும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு தனிநபர்களின் உரிமை களை நசுக்கக் கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிகார பலத்தை விட சட்டத்தின் மாண்பே ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டும்.

முன்னாள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ‘துர்குட்’ மார்ஷலின் பொன்மொழி ஒன்று உண்டு `ஒரு நீதிபதியின் உண்மையான அதிகார ஆதாரம் என்பது பதவியோ அல்லது சட்ட அதிகாரமோ அல்ல. அரசியலமைப்பின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பகத் தன்மையும், அதன் மூலம் அவர் ஈட்டும் மக்களின் மரியாதையும் மட்டுமே'” தனது உரையை நிறைவு செய்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *