நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிகண்ணு மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு கோவிந்தசாமி ஆகியோரின் மாமனாரும், முனைவர் த.நர்மதா, மறைந்த த.மணிமொழி, த.லதா, த.இங்கர்சால் ஆகியோரின் தந்தையாரும்,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை  கிளைக் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருமான (BDO) பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிக்கண்ணு (வயது 85) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று  (27-02-2026) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

இறுதி ஊர்வலம் (27-02-2026) இன்று மாலை 4 மணியளவில் நெடுவாக்கோட்டை அவர்களது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த தம்பிக்கண்ணு  அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

 27.2.2026         

தொடர்புக்கு:

முனைவர் அதிரடி க.அன்பழகன் : 7373743415

த.நர்மதா : 9944850047

குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் ஆகியோர்
த. நர்மதா, அதிரடி க.அன்பழகன் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தனர்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *