கோவை, பிப்.26 கோவை மாநகராட்சி 73-ஆவது வார்டு உறுப்பினரும், நகரமைப்புக் குழுத் தலைவருமான சந்தோஷ் என்ற சோமு.
இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார். கடந்த 23.2.2026 அன்று வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தந்தை, மகளை கோவை ரேஸ்கோர் சில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோ தனையில், சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோ தனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக அறுவை சிகிச்சை செய்வது என்பது பெரும் சிக்கலான விஷயம் என்றும் கூறினர். இருப்பினும் அறுவை சிகிச்சை செய்து பாருங்கள் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கவே, சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரிய வந்தது.
இதனை மருத்துவர்கள் சந்தோஷி தெரிவித்தனர். இதையடுத்து அவர் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை கொடையளிக்க முன்வந்தனர். மாணவியிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், தோள், கண் உள்ளிட்ட 4 உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புக் கொடையால் தற்போது 4 பேர் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.
