திருச்சி, பிப்.26- 9ஆம் வகுப்பு டி.விசாந்தினி மற்றும் 12ஆம் வகுப்பு கே.ஹரிணி ஆகிய இருவரும் மாவட்ட அளவிலான டேக்வோண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்று டில்லியில் நண பெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
7ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா. திருச்சியில் நடைபெற்ற 6th International chess open Rapid FIDE Rating சதுரங்கப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 4ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
