அரியானா பி.ஜே.பி. ஆட்சியில் அரசுக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப்.24 அரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை அய்டிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவ தாக ரிசர்வ் வங்கி தெரி வித்துள்ளது.

அரியானா அரசு தனியார் நிதி நிறுவனத்துடன் இணைந்து அய்டிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் சில கணக்குகளை வைத்துள் ளது. இந்நிலையில் ஹரியானா அரசு வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடி முறை கேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 18-ஆம் தேதி முதல் அரியானா அரசின் இதர நிறுவனங்களின் கணக்கு களிலும் இதுபோன்ற சிக்கல்கள் கவனிக்கப்பட்டன. இதையடுத்து அய்டிஎப்சி வங்கி நடத்திய முதல்கட்ட ஆய்வில், ஹரியானா வங்கி கிளை ஊழியர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து வங்கி வாரியத்தின் சிறப்பு குழு மற்றும் தணிக்கை குழுவின் கவனத்துக்கு வங்கி நிர்வாகம் கொண்டு சென்றது. காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டது.

4 பேர் பணியிடை நீக்கம்

இதையடுத்துவங்கி அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதர வங்கி கணக்குகளுக்கு மோசடியாக மாற்றப்பட்ட பணத்தை திருப்பி அனுப்பும் படியும் அய்டிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த மோசடி குறித்து ஆய்வு செய்ய ‘கேபிஎம்ஜி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தடயவியல் தணிக்கை குழு அமைக்கப்பட் டுள்ளதாகவும், இந்த பணிகள் முடிய 4 முதல் 5 வாரங்கள் ஆகும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணம் மீட்கப்படும்

இந்த மோசடி குறித்த அரியானா சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது பதில் அளித்த மாநில முதலமைச்சர் 66 தவறு நயப் சிங் சைனி, செய்தவர்கள் வங்கி ஊழியராக இருந்தாலும், அரசு ஊழியராக இருந்தாலும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுத்து மக்கள் பணம் மீட்கப்படும்” என்றார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *