மக்கள் நலனை பாதுகாக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு

பிரம்மபுத்திராவில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது சீனா
5 மாநில மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் அபாயம்

புதுடில்லி, ஜூன் 22 இந்திய எல்லையிலிருந்து  50 கி.மீ தொலைவில், திபெத்தின் யார்லங் சாங்போ நதியில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டும் பணிகளைச் சீனா அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தொடர் எதிர்ப்புகளையும் மீறி சீனா இத்திட்டத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்து வருகிறது.

பிரம்மபுத்திரா

திபெத்தில் யார்லங் சாங்போ என அழைக்கப்படும் இந்த நதி, அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து, அசாமில் பிரம்மபுத்திராவாக உருமாறி வங்கக்கடலில் கலக்கிறது. இந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சீனா கட்டும் அணையால், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்கு வங்கம் ஆகிய அய்ந்து மாநிலங்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த அணையால் பிரம்மபுத்திரா வின் நீர்வரத்து கடுமையாகக் குறைந்து, விவசாயம், குடிநீர், மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. வறட்சியும் வெள் ளமும் மாறி மாறி வந்து வடகிழக்கு மாநிலங்களைப் புரட்டிப் போடும் என சுற்றுச் சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

5 மாநில மக்களின்
வாழ்வாதாரம் கேள்விக்குறி

நாட்டின் பாதுகாப்புக்கும், கோடிக்கணக்கான மக்களின் வாழ் வாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக சீனா செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றிய மோடி அரசோ இதில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதிலேயே குறியாக உள்ளது.

வேடிக்கை என்னவென்றால், சீன அணையால் நேரடியாகப் பாதிக்கப்படப் போவது பாஜக ஆளும் அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்தான். தனது சொந்த மாநிலங்களின் நலனைக் கூட பாதுகாக்க முடியாமல், ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

சீனாவின் ஒவ்வொரு அசைவையும் “உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என வெற்று அறிக்கை விடுவதைத் தவிர, இதுவரை எந்த உறுதியான ராஜதந்திர நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பை விட ஆட்சி கவிழ்ப்பு அரசியலே முக்கியம் என ஒன்றிய அரசு செயல்படுவதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *