20.2.2026 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஷூன்யா யாஷிமாக்என்ற பவுத்தருக்கும், செல்வி என்ற சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. மணமகள் செல்வி தனது அய்.டி. பணிக்காக ஜப்பானுக்கு சென்று பணியாற்றும் காலத்தில் பணித் தோழராக கிடைக்கப் பெற்ற ஷூன்யாவோடு மனதால் இணைந்து பின் “தமிழ் நாட்டில் சுயமரியாதைத் திருமண முறை உள்ளது. நாம் மதங்கள் சாராத சுயமரியாதைத் திருமண முறையில் இணையேற்பு நிகழ்வினை நடத்திக் கொள்ளலாம்” என்று கூற அவரும் ஆவலுடன் ஒப்புக் கொண்டு நடந்தேறிய இணையேற்புதான் இது. பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இணையேற்பு உறுதி மொழி கூற வாழ்விணையர்கள் மகிழ்வுடன் உறுதிமொழி ஏற்று நடத்திக் கொண்டனர்.
