நாதகர்கோவில், மே 14- குமரி மாவட்ட கழக சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில், ஒழுகினசேரியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, மாவட்ட ஆகியோர் கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராச சேகர், கழக பொறுப்பாளர்கள் ஞா.பிரான்சிஸ், கழக குமரி நகர செயலாளர் க.யுவான்சு தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச மணிமேகலை, சி.அய்சக் நியூட்டன், எ.ச. காந்தி, நாகராஜன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
