குஜராத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அகமதாபாத், பிப்.19 குஜராத் மாநிலத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 4.4 கோடியாகக் குறைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்அய்ஆர்) மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், தவறான பதிவு போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்த பின்னர் 73.7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன.   அப்போது 3.9 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

77 லட்சம் பேர் நீக்கம்

அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் 2025-ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 17.2.2026 அன்று வெளியிடப்பட்டது. அதில் 13.4 சதவீத வாக்காளர்கள் எண்ணிக்கை (மொத்தம் 77 லட்சம் பேர்) குறைந்தது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி குஜராத் மாநிலத்தில் தற்போது வாக்காளர் களின் எண்ணிக்கை 4.4 கோடியாக குறைந்துள்ளது. அதேவேளையில் 9.5 லட்சம் புதிய வாக் காளர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல் முறை வாக்காளர்கள்.

கடந்த 2025 திருத்தப்படாத வாக்காளர் பட்டியலில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருப்பது கண்டறியப் பட்டது. தவிர 18 லட்சம் பேர் இறந்துள்ளனர். 9.8 லட்சம் பேரை அவர்கள் அளித்திருந்த முகவரியில் கண்டுபிடிக்க முடியவில்லை. 3.8 லட்சம் போலி வாக்காளர் அட்டைகள் இருந்தன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி அகமதாபாத்தில்தான் அதிகபட்சமாக 49.1 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்ததிலும் அகமதாபாத் நகரம்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1.5 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *