அதிக அளவு அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளின் பட்டியல் இந்தியாவுக்கு 6ஆம் இடம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.14 உலகில் மொத்தம் 195 நாடுகளில் இருக் கும் நிலையில் அதில் சொற்ப நாடுகள் மட்டுமே அணு ஆயு தத்தை வைத்துள்ளது. அது எந்தெந்த நாடு? எவ்வளவு அணு ஆயுதங்கள் வைத்துள்ளது? என்ற விவரம் வருமாறு:

அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 9ஆம் இடத்தில் வட கொரியா உள்ளது. வட கொரியாவிடம் சுமார் 50 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 8ஆம் இடத்தில் உள்ளது. இஸ்ரேல் உள்ளது. இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்த பட்டியலில் 7ஆம் இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியா 6ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிடம் சுமார் 180 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த பட்டியலில் இங்கிலாந்து 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டிடம் சுமார் 225 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பிரான்ஸ் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் சுமார் 290 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் சீனா 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. சீனாவிடம் சுமார் 600 அணு ஆயு தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் அமெரிக்கா 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவிடம் சுமார் 5,177 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக, உலகளவில் அதிக அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. ரஷ்யா விடம் சுமார் 5,459 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *