சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லை ஒன்றிய அரசு அறிவிப்பு!

புதுடில்லி, ஜூலை 2– ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து 9ஆவது காலாண்டாக மாற்றமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளன.

அரசுத் தரப்பில் கடைசியாக கடந்த 2023-2024 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போதைய ஜூலை – செப்டம்பர் காலாண் டிலும் வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங் களுக்கான தற்போதைய வட்டி விகித விவரங்கள் பின்வருமாறு:

சுகன்யா சம்ரிதி திட்டம் (பெண் குழந்தைகள் சேமிப்பு) 8.2 சதவீதம் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 7.7 சதவீதம் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) (115 மாதங்களில் முதிர்வடையும்) 7.5 சதவீதம் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) 7.4 சதவீதம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 7.1 சதவீதம் 3 ஆண்டு கால வைப்புத்தொகை (FD) 7.1 சதவீதம் அஞ்சலக சேமிப்பு கணக்கு 4.0 சதவீதம் பிரபலமான பிபிஎப் (PPF) மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம்  மற்றும் 4 சதவீதம்  ஆக மாற்றமின்றி தக்க வைக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் வழக்கமான லாபத்தை தொடர்ந்து பெற முடியும் என நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *