1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு உயரிய விருது!

1 Min Read

லக்னோ, ஜன.20– உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான ‘அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ வழங்கி கவுரவிக்கப்பட்டது

லக்னோவின் சார்பாக் ரயில் நிலையத்தை மய்யமாகக் கொண்டு செயல்படும் ஆய்வாளர் சந்தனா சின்ஹா, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளார்.

2024இல் 494 குழந்தைகளையும், 2025இல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.

நடைமேடைகளில் தனியாக இருக்கும் குழந்தைகள், கடத்தல்காரர்களுடன் இருப்பவர்களைக் கண்டறியும் விசேசப் பயிற்சியை தனது குழுவினருக்கு இவர் வழங்கியுள்ளார்.

இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய (Informers) நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.

பீகார் முதல் பஞ்சாப் மற்றும் அரியானா வரையிலான கடத்தல் பாதைகளைக் கண்காணித்து, குழந்தைத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட பல குழந்தைகளை இவர் மீட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *