‘‘தகைசால் தமிழர்’’ விருது பெற்ற தோழர் காதர் மொகிதீன் அவர்களுக்குப் பாராட்டு விழா

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை,  ஆக.16 தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பாராட்டு விழாவும், விருது வழங்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, ‘சமுதாய சேவகன் ஒளி வீசும் காவலன்’ ஆவணப் படம் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா சென்னை எழும்பூர் பைஸ் மகாலில் நேற்று (15.8.2025) மாலை நடைபெற்றது.

கட்சியின் மாநில செயலாளர் ஏ.எம் முகம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். கே.பி.ஏ. காஜா முயினுத்தீன் பாகவி தலைமையேற்றார். தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷானவாஸ் எம்.எல்.ஏ. முதலியோர் வாழ்த்துரை வழங்கினர்.

‘தகைசால் தமிழர்’ விருது ெபற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஏற்புரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *