டில்லி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையே பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழி வகுத்தது சிவசேனா கட்சி கருத்து

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மும்பை, பிப்.13 இந்தியா கூட்டணிக் கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான பிளவு, டில்லி தேர்தலில் பாஜகவின் –வெற் றிக்கு வழிவகுத்தது என்று சிவசேனா (உத்தவ்) கட்சி கூறியுள்ளது.
டில்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றிய பாஜக, அர்விந்த் கெஜ்ரிவால் தலை மையிலான ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியது. காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மோசமான தோல்வியை தழுவியது.

‘சாம்னா’ நாளிதழ்
இதுகுறித்து சிவசேனா (உத்தவ்) கட்சி தனது ‘சாம்னா’ நாளிதழில் கூறியிருப்பதாவது: டில்லியில், ஆம் ஆத்மியும் காங்கிரசும் ஒன்றை யொன்று அழிக்கப் போராடின, இது பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவுக்கு விஷயங்களை எளிதாக்கியது. இது தொடர்ந்தால், ஏன் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்? அதனால் என்ன பயன் விளையும்?
டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் ஒன்றை யொன்று கடுமையாக விமர்சனம் செய்தன. எதிர்க்கட்சிகள் இடையே இதேபோன்ற பின்னடைவு கடந்த ஆண்டு மகாராட்டிராவிலும் ஏமாற்றத்தை அளித்தது. டில்லி தேர்தல் முடிவுகளில் இருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்கத் தவறினால், அது மோடி மற்றும் அமித் ஷாவின் எதேச்சதிகார ஆட்சியை வலுப்படுத்தும்.

ராகுலுக்கு எதிராகவா?
கடந்த ஆண்டு அரியானாவிலும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அங்கு பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள சில சக்திகள் ராகுல் காந்தியின் தலைமையை வலிவற்றதாக மாற்ற விரும்புகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.
இப்படித்தான் நடக்கப் போகிறது என்றால், கூட்டணி அமைக்க வேண் டிய அவசியமில்லை. உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருங்கள்! டில்லி தேர்தலில் இருந்து யாரும் பாடம் கற்கப் போவதில்லை எனில், சர்வாதிகாரம் அதிகாரம் பெறுவதற்கு உதவிய பெருமையை அவர்கள் பெறலாம்.
இவ்வாறு ‘சாம்னா’ நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *