விலைவாசி உயர்வால் எளிய மக்கள் கடும் அவதி ; ஒன்றிய அரசு தூங்குகிறது

Viduthalai
1 Min Read

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.26 விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ பெருந் தூக்கத்தில் இருப் பது போல் தூங்குவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி காணொ லியில் கூறி இருப்பதாவது:

வணிகத்தில் மாற்றம்
“சமீபத்தில் டில்லியில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருள்களை விற்கும் இடம் மட்டுமல்ல. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்ச்சிபூர்வமான மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால், வணிகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது. எனவே நாம் ஒரு சமநிலையை அடைய வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவற்றால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்க வேண்டும்.

உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போது, சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்” என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த காணொலியில் குடும் பத்தை நிர்வகிக்கும் பெண்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அப்போது, பணவீக்கம் தரும் பாதிப்பு குறித்த தங்கள் அனுபவங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு, முன்பு பழகிய காய்கறிகளை வாங்க முடியாமல் உணவுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டி உள்ளது என்று ராகுல் காந்தியிடம் அவர்கள் கூறுகிறார்கள்.

அரசு தூங்குகிறது
இதை உணர்த்தும் விதமாக, “ஒரு காலத்தில் ரூ.40-க்கு விற்கப் பட்ட பூண்டு, இன்று ரூ.400-க்கு விற்கப்படுகிறது. உயரும் பண வீ க்கம் ஏழை, எளிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை கெடுத்துவிட்டது. ஆனால், அரசு தூங்குகிறது” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *