தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை வரலாற்றில் இடம்பெறவேண்டிய கொள்கை உரை!

1 Min Read

தமிழர் தலைவர் பாராட்டு அறிக்கை

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வு தொடர்பாக நேற்று கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்களும் கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்க ளும், இந்தியா கூட்டணியின் எம்.பி.க்களும் அரசியலைமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், சமூகநீதி அடிப்படையிலும் பல முக்கியமான கருத்துகளை எடுத்து வைத்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையில், மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும் என்பது எங்கள் கொள்கை என்றும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மகளிருக்கு இட ஒதுக்கீடு இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டி, ”ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் இந்த அரசுக்கு உடன்பாடு இல்லை; அதைத் தவிர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்கூட்டியே இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்கிற அய்யம் எழுகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றும் குறிப்பிட்டு ஆற்றியுள்ள உரை வரலாற்றில் இடம்பெறவேண்டிய கொள்கை உரையாகும்.

அவரது எழுச்சி முழுக்கம் எங்கும் எதி ரொலிக்கட்டும்! நமது கொள்கைபூர்வ வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *