தோ்தல் ஆணையா்களை தோ்தல் மூலம் தோ்வு செய்வதே சரியானது : உத்தவ் தாக்கரே

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாகபுரி, டிச.18 தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமை யிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும் என்று மகாராட்டிர மேனாள் முதலமைச்சரும், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
மகாராட்டிர மாநிலம், நாகபுரியில் செய்தியாளா்களை நேற்று (17.12.2024) சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

தேர்தல் மூலம் தேர்வு

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தோ்தல் நியாயமாக நடைபெறுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, தோ்தல் ஆணையா்களை பிரதமா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, தோ்தல் மூலம் தோ்வு செய்ய வேண்டும்.

நாட்டில் உள்ள பிற பிரச்சி னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப வேண்டும் என்பதுதான், இப்போது ஒன்றிய அரசு ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்ற மசோதாவை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்.

மகாராட்டிர அமைச்சா்களை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துவைத்தார். அவா்களில் பலா் ஒன்றிய விசாரணை அமைப்புகளால் வழக்குகளை எதிர்கொண்டவா்கள். அமைச்சா் பதவி கிடைக்காததால் ஆளும் கூட்டணியில் அதிருப்தி அணி உருவாகியுள்ளது.

இன்னும், அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கப்படவில்லை. துறைகள் ஒதுக்கப்பட்ட பிறகு விரும்பிய துறை கிடைக்கவில்லை என்று மேலும் ஓா் அதிருப்தி அணி உருவாகும்.

மகாராட்டிர தோ்தலின்போது மகளிருக்கு மாதம் ரூ.2,100 வழங்கப் படும் என்று பாஜக கூட்டணி வாக்குறுதி அளித்தது. எனவே, முதலில் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சருடன் சந்திப்பு

நாகபுரியில் உள்ள பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அவரின் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிலா் உடனிருந்தனா். இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில், ‘புதிய முதலமைச்சரை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் முதிர்வின் உதாரணம். மகாராட்டிர மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம். எதிர்க்கட்சித் தலைவா் பதவி குறித்து விவாதிக்கப்படவில்லை’ என்று செய்தியாளா்களிடம் ஆதித்ய தாக்கரே கூறினார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடா் நாகபுரியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மேலவை உறுப்பினரான உத்தவ் தாக்கரே நாகபுரி வந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் பாஜகவும், அப்போது உத்தவ் தலைமையில் இருந்த சிவசேனையும் கூட்டணியாக போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால், முதலமைச்சர் பதவி யாருக்கும் என்ற போட்டியில் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முதல்வரானார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *