புதுடில்லி, மே.21- டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த பரபரப் பான சூழலில் டில்லியில் ஓடும் சில மெட்ரோ ரெயில்களிலும், சில மெட்ரோ ரயில் நிலை யங்களிலும் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங் களை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (20.5.2024) எழுதி வைத்து உள்ளனர். இது தொடர்பான ஒளிப்படங்கள் மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது இருதரப்பினருக்கான மோதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்வின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட் டியிருக்கிறது. இது தொடர்பாக மாநில அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவருமான அதிஷி செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘கெஜ்ரிவாலை அவர்கள் (பா.ஜனதா) கைது செய்தனர். சிறையில் இன்சுலின் ஊசியை நிறுத்தினர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சுவாதி மாலிவாலை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை கூற வைத்தனர். தற்போது அவருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டி ருக்கிறது’ என தெரிவித்தார். மெட்ரோ ரயில் நிலையங்களில் கண் காணிப்பு கேமரா இருக்கும்போது, இந்த மிரட்டல் வாசகங்களை எழுதிய வரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அதிஷி, இதன் பின்னணியில் பா.ஜனதா இருப்பதை இது உறுதி செய்வதாக தெரிவித்தார்.
மெட்ரோ ரயில்களில் கெஜ்ரிவாலை அச்சுறுத்தும் வாசகங்கள்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:மெட்ரோ ரயில்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
