குருகிராம், ஜூலை 24- ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாள்களாக உண்ணா நிலைப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர் வலர் சோனம் வாங்சுக், இன்று (ஜூலை 23) நள்ளிரவு தனது போராட் டத்தை அதிகாரபூர்வமாக முடித்துக் கொண்டார்.
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனை யில், ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தார்.
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சோனம் வாங்சுக், “பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நேரில் சந்தித்தும் அல்லது கடிதம் மூலமாகவும் உண்ணாநிலைப் போராட் டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகும், நாட்டில் வன்முறை பரவுவதைத் தடுக்கும் நோக்கிலும் 26 நாள் களுக்குப் பிறகு எனது உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன். இந்த நிபந்தனைகள் குறித்து விரைவில் ஒரு காட்சிப் பதிவில் விரிவாக விளக்குகிறேன். அதே வேளையில் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தராதவாறு அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வினாத்தாள் கசிவுக்கு எதிராக விரைவு நீதிமன் றங்கள் அமைத்தல் மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய மசோதா குறித்து இன்று (24.7.2026) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத் தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும் சோனம் வாங்சுக் தனது போராட் டத்தை திரும்பப் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர் மருத் துவர்களின் ஆலோ சனையைப் பின்பற்றி விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
அமைதியான போராட்டம்
சோனம் வாங்சுக் தனது உண்ணாநிலையை முடித்துக் கொண்டாலும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டில்லி ஜந்தர் மந்தரில் தங்களது அமைதியான போராட்டம் தொடரும் என்றும், ஜூலை 24 அன்று நாடு முழுவதும் மாவட்ட அளவில் அமைதிப் பேரணிகள் நடைபெறும் என்றும் சிஜேபி அமைப்பு (கரப்பான் பூச்சி) அறிவித் துள்ளது.
