பெரியார் திடல் பணித்தோழர் கலைமணியின் தந்தை முடப்பள்ளி கோ.கருணாநிதி மறைவு பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் தோழர்கள் இறுதி மரியாதை

2 Min Read

விருத்தாசலம், ஜுலை. 24– திராவிடர் கழக தலைமை நிலையமான பெரியார் திடல் பணித் தோழர் கலைமணியின் தந்தை கோ.கருணாநிதி உடல்நலக் குறை வால் ஜூலை 21 ஆம் தேதி உயிரிழந்தார்.

உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கோ.கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் ஏராள மான கழகத் தோழர்கள் முடப்பள்ளியில் உள்ள கலைமணி இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி னர். அப்போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் அறிக்கை வாசிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட இரங்கல் அறிக்கை  உறவினர்கள் ஊர்மக்கள் மற்றும் தோழர்களிடம் வழங்கப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன்,துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மா.அழகிரிசாமி, விருத்தாசலம் கழக மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், மாவட்டச் செயலா ளர் ப.வெற்றிச்செல்வன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி, காப்பாளர்கள் அரங்க .பன்னீர்செல்வம், அ. இளங்கோவன், அரியலூர் மாவட் டத் தலைவர் விடுதலை நீலமேகம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்கபரணிதரன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வெ.அன்பரசன், புதுவை மாவட்டச் செயலாளர் தி.ராசா,  வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் துரை.அருண், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன்,  பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம.பூவரசன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நத்திகள், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், பொதுக்குழு உறுப்பினர் அகருணாகரன்,  தாம்பரம் மாவட்ட மகளிர் அணித் தலைவர் மு.நாகவல்லி, தென்சென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.பவானி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் நா.பார்த்திபன், வை.கலையரசன், முரளி கிருஷ்ணன், சின்னதுரை, நிலவன், யாழ்.திலீபன், ரா.அருள், கே.என்.மகேஷ்வரன், மு.ரங்கநாதன்,  வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ராமு, அ.இளவேனில், வழக்குரைஞர் சரவணன், முத்துராஜ், பிரபாகரன்,  ராணுவ முன்னாள் வீரர் கருப்பையா, குணசேகரன், அரும்பாக்கம் தாமோதரன், பெரியார் புத்தக நிலையம் பூங்குழலி, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், செயலாளர் சே.பெரியார் மணி, விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் கா.குமரேசன், நா.பாவேந்தர்விரும்பி, கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, கோ.வேலு, வடலூர் குணசேகரன், முருகன், புதுவை கோ.மு.தமிழ்ச்செல்வன், ஆ.சிவராசன், கடலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் இராமநாதன், அப்பியம்பேட்டை சேகர், செந்தில், நெல்லுப்பட்டு இராமலிங்கம், பர்தீன், தஞ்சை திராவிடச் செல்வன், ஜெயசீலன், சேத்துப்பட்டு நாகராஜ் உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *