தேர்தல் பத்திர விவகாரம்: நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு! – கபில் சிபல் கண்டனம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,ஏப்.23 – “தேர்தல் பத் திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது:
அவை குறித்த உச்ச நீதிமன் றத்தின் கருத்துக்கு எதிராக உள் ளது” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித் துள்ளார்.
2024இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பங்கேற்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து சிற்சில மாற்றங்க ளுடன் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியிருந்தார்.

இதனைக் கண்டித்துள்ள கபில் சிபல், “நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில் ‘நாங்கள் தேர்தல் பத்தி ரங்களை மீண்டும் கொண்டு வருவோம்’ என்று தெரிவித்துள் ளார். மேலும், தேர்தல் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவை வெளிப் படைத் தன்மைக் காக அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் கூறியிருக்கிறார். இது தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு நேர் எதிரானது

உச்ச நீதிமன்றம் கூறும் போது தேர்தல் பத்திரம் வெளிப் படையானது இல்லை. அவை வெளிப்படைத் தன்மையில்லா மல் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறியது. இப்போது அவர்கள் (பாஜக) சந்திக்கும் பிரச்சினை என்னவென்றால், அவர்களிடம் இந்தத் தேர்த லுக்கு பணம் இருக்கிறது. அவர் கள் தோற்றுப்போனால் பணம் வேண்டும் என்பது அவர்களுக் குத் தெரியும்.
என்றாலும், நிர்மலா சீதா ராமன் அவர்கள் (பாஜக) வெற்றி பெறுவார்கள் என்றும், மீண்டும் அதை (தேர்தல் பத் திரங்கள்) கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திர விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகத் ஏன் கருத்து எதுவும் கூறா மல் மவுனமாக இருக்கிறார்.
பிரதமர் மோடியும் தேர்தல் பத்திரங்களை பாதுகாக்கும் முயற்சியிலேயே இருக்கிறார். அது குறித்து உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்த பின் னர் தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசுவது மிகவும் தவறானது. நாம் விலை குறைய வேண்டும் என்பதற்காக இறக்குமதி செய்கி றோம். அவர்கள் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக பருப்பை இறக்கு மதி செய்கிறார்கள்” என்றார் கபில் சிபல்.

முன்னதாக, தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிரான வழக்கில் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களுக்கு ஆதரவான வாதங்களுக்கு மூத்த வழக்குரை ஞரான கபில் சிபல் தலைமை தாங்கினார் என்பது கவனிக்கத் தக்கது.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, தேர்தல் நிதியாக கட்சிகளுக்கு நன்கொடை அளிப் பவர் யார் என்று தெரியாத வகை யில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருந்த தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்தது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் எவ்வளவு நன் கொடையளித்தார்கள், அதனை யார் பெற்றுக்கொண்டார்கள் என்ற விபரங்களை வெளியிடு மாறு தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *