பேராசிரியர் மா.நன்னனின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி மறைவு – இரங்கல்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மறைந்த பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி (வயது 96) அவர்கள் இன்று (20.1.2024) விடியற்காலை 4.30 மணிக்கு சிதம் பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். தன்னுடைய மகன் மறைந்த பொழுது, எந்தவித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ் வினை நடத்தியவர். அவரது மகள்களுக் கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை (கி.வீரமணி),
20.1.2024 தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *