புதுடில்லி, நவ. 27- நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இன்னும் முடித்து வைக்கப்படாத மழைக்காலக் கூட்டத் தொடரை அடுத்து, இது சிறப்பு அமர்வாகக் கருதப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “அவசர அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களவையை நவம்பர் 30 அன்றும், மாநிலங்களவையை டிசம்பர் 2 அன்றும் மீண்டும் கூட்டுமாறு மக்களவைத் தலைவரிடமும் மாநிலங்களவை தலைவரிடமும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறப்புக் கூட்டத்தில் பணி களின் தேவையைப் பொறுத்து, இரு அவைகளின் அமர்வுகளும் டிசம்பர் 3, 2026 அன்று நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடருக்காகவே கடந்த ஆகஸ்ட் 13-இல் நிறை வடைந்த மழைக்காலக் கூட்டத் தொடர் 100 நாள் கடந்த பின்பும் முடித்து வைக்காமல் இருந்ததாகத் தெரிகிறது.
தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்களுக்கு மத்தியில் இந்த அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசின் திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், இந்த அமர்வு கூட்டப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் (25.11.2026) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் பற்றிய விவகாரம் குறித்து விவாதிக் கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் வரவி ருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குத் தயாராகுமாறு அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
கடந்த ஏப்ரல் 17இல் ‘அரசிய லமைப்புச் சட்ட (131-வது திருத்த) மசோதா, 2026’ அறிமுகப் படுத்தப்பட்டது. இதில், மகளிர் இட ஒதுக்கீடு செயல்படுத்துவதை, தொகுதி மறுசீரமைப்புடன் (delimitation) இணைக்கும் நோக்கம் இருந்தது. இதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், மசோதாவுக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசு பெறத் தவறியது.
தொகுதி மறுசீரமைப்பு குறித்த தற்போதைய விவாதத்தில், அனைத்து மாநிலங்களிலும் மக்க ளவை இடங்களை 50 சதவீதம் அதி கரிப்பதற்கான ஒரு முன்மொழிவும் அடங்கியுள்ளது. அதேவேளையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய இடங்களின் விகிதாச் சாரம் அப்படியே பரா மரிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறி விப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனது நாடாளுமன்ற வியூகக் குழு கூட்டத்தை இன்று (27.11.2026) மாலை 4.30 மணிக்கு டில்லியில் நடத்தவுள்ளது. இதில், வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இந்தக் கூட்டத் தொடரானது, வாக்காளர் பட்டியல்களைச் சீரமைக்கும் சிறப்பு தீவிர மறுஆய்வு குறித்த எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது.
இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க் கட்சிகள், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
