காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமாம்! உச்ச நீதிமன்றத்தில் கருநாடகா அரசு புதிய மனு தாக்கல்

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 25– காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத்திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கருநாடக அரசு மனு தாக்கல் செய் துள்ளது.

கருநாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவைவிடக் கூடுத லாகத் தண்ணீரை எடுத்துக் கொள்ள உரிமை யில்லை என்றும்,  காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், காவிரியின் குறுக்கே தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எந்தவொரு புதிய நீர்ப்பாசனத் திட்டத் துக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரியுள்ளது.

குறிப்பாக, மேட்டூர் உபரிநீரைச் சேலம் மாவட்ட ஏரிகளில் சேகரிக்கும் சரபங்கா திட்டம், புது கட்டளை நீர்ப்பாசனத் திட்டம், ஆதனூரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், ராஜவாய்க்கால் வடிகால் நீர்ப்பாசனத் திட்டம், நொய்யல் ஆறு மற்றும் கல்லணை வடிகால் நீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குத் தடை கோரியுள்ளது.

மேலும், காவிரி – வெள்ளாறு இணைப்புப் பணிகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி பெறப் படாததால் அவை சட்டவிரோதமானவை என்றும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களை இடித்து, பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ள கருநாடக அரசு, தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு உத்தேசிக்கப்பட்ட நீர் ஒதுக்கீடு 83.27 டி.எம்.சி.யி லிருந்து 40.93 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *